படுக்கை அறைக்குள் கேமரா – வாய்ஸ் ரெக்கார்டர் வைத்து கணவன் கொடுமை..! உயிரை மாய்த்த பெண் ஊடகவியலாளர்..!

சந்தேக புத்தியால் படுக்கை அறையில் கேமராவுடன் கூடிய வாய்ஸ் ரெக்கார்டரை பொருத்தி கணவன் சைக்கோ போல தினம் தினம் கொடுமைப் படுத்தியதால் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளர் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.

பெங்களூரில் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுருதி நாராயணன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

 கடந்த 2017 – ஆம் ஆண்டு கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்த சுருதிக்கும் – கேரளா தளிப்பறம்பு பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையுடன் கணவன் அனிஷ், சுருதியிடம் மிக கொடூரமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சைக்கோ தனமான கணவனான அனிஷ் எப்போதும் சந்தேகத்துடன் மனைவியை சுருதியை துன்புறுத்தி வந்துள்ளார். தங்களது படுக்கை அறைக்குள் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது போன்ற விபரீத செயல்களிலும் அனிஷ் ஈடுபட்டுள்ளார்.

சுருதியை 2 முறை கொலை செய்யவும் அனிஷ் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு நான்கு வருடங்களாக குழந்தை ஏதும் இல்லாத நிலையில், நாளுக்கு நாள் கணவனின் கொடுமை அதிகரித்து வந்துள்ளது. சம்பவத்தன்று சுருதியின் செல்போனுக்கு அவரது தாயார் பலமுறை அழைத்தும், செல்போனை எடுக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு போன் செய்து நிலவரத்தை எடுத்துக் கூறி உள்ளனர். உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ள வீட்டில் யாரும் கதவை திறக்க முன்வராததால், வீட்டின் பால்கனி வழியாகச் சென்று கதவை உடைத்து பார்த்த போது படுக்கை அறையில் சுருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து கேரளாவிலுள்ள ஸ்ருதியின் உறவினர்கள் தங்கள் வீட்டுப்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைகளை புகாராக காவல் நிலையத்தில் அளித்தனர். இதை தொடர்ந்து ஸ்ருதியின் சைக்கோ கணவன்அனிஷ் மீது வழக்கு பதிவு செய்து கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராருக்கு தன்னம்பிக்கை சொல்லும் ஊடகத்துறையில் பணிபுரிந்த சுருதி நாராயணன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எதிர்த்து போராடி தீர்வுகாணாமல், விபரீத முடிவெடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டது வேதனையின் உச்சம்,..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.