ஐதராபாத்: விங்க்ஸ் இந்தியா -2022’ விமான கண்காட்சி, ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று முடிந்தது. இதில்நேற்று பங்கேற்று பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. விமான பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டில் ஒரு நாளைக்கு 4.10 லட்சமாக உயரும். இதனால், விமானங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 400 விமானங்கள் மட்டுமே இருந்த நிலையில், விமானங்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 710 ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் ஆண்டுக்கு 110 முதல் 220 வரையிலான புதிய விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தார்.