பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டைனின் இரண்டு தீவுகளை விற்பனை செய்து அந்தத் தொகையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரண்டு கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலராக குறிக்கப்பட்டுள்ளது. சிறிய கட்டடங்கள், கிறிஸ்துமஸ் குடில் போன்ற , கடற்கரை பகுதிகள் போன்றவை கொண்ட இந்த தீவுகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டோனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருந்தவரான ஜெஃப்ரி எப்ஸ்டைன், சிறுமிகள் உட்பட 36 பெண்களை பாலியல் ரீதியாக சீரழித்ததாகவும் பாலியல் தொழிலுக்காக கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சிறையில் உயிரிழந்தார்.