இந்திய மக்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தொகையைச் செலவு செய்து அடையும் சொத்து என்றால் அது கட்டாயம் சொந்த வீடாகத் தான் இருக்க முடியும். இந்த வேகமாக நகரும் வாழ்க்கையில் சொந்த ஊரில் இருப்பதைத் தாண்டி வேலை காரணமாக வெளியூரில் தான் அதிகக் காலத்தை நாம் கழிக்கிறோம்.
இதனால் இன்றைய தலைமுறையினர்கள் அதிகளவில் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சொந்த வீட்டை வாங்கவே அதிகளவில் விரும்புகின்றனர். சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பெங்களூரு-க்கு தான் அதிகளவில் வேலைக்காகச் செல்கின்றனர்.
ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!
இந்த நிலையில் பெங்களூரின் முக்கியமான பகுதிகளில் சொந்த வீடு வாங்க திட்டமிடும் முன்பு எந்தப் பகுதியில் என்ன விலை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பெங்களூர்
பெங்களூரில் எந்தப் பகுதியில் எந்த விலையில் சொந்த வீடு வாங்க முடியும் என்பதைச் சந்தையில் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. 75 லட்சத்திற்கு மேல், 50 முதல் 75 லட்சம் வரையில், 50 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இந்த விலை அடிப்படையில் எந்தப் பகுதியில் சொந்த வீட்டை வாங்க முடியும், அதற்கான பட்ஜெட் என்ன வரும் என்பதை இப்போது பார்ப்போம்.
75 லட்சத்திற்கு மேல்
புட்டிகரே கிராஸ் : ஒரு சதுரடி 5500-6100 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1400 முதல் 1550 சதுரடி கொண்ட 3BHK வீட்டை 83.5 முதல் 87.5 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
வொயிட்பீல்டு : ஒரு சதுரடி 5800-6200 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1400 முதல் 1600 சதுரடி கொண்ட 3BHK வீட்டை 88 முதல் 92 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
சர்ஜாபூர் சாலை : ஒரு சதுரடி 5800-6500 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1400 முதல் 1650 சதுரடி கொண்ட 3BHK வீட்டை 92.5 முதல் 96.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
ஜேபி நகர் : ஒரு சதுரடி 7050-9500 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1700 முதல் 2100 சதுரடி கொண்ட 3BHK வீட்டை 1.55 முதல் 1.59 கோடி ரூபாயில் வாங்க முடியும்.
ஹெப்பால் : ஒரு சதுரடி 8000-11000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1600 முதல் 2400 சதுரடி கொண்ட 3BHK வீட்டை 1.88 முதல் 1.92 கோடி ரூபாயில் வாங்க முடியும்.
50 முதல் 75 லட்சம் வரை
காடுகோடி : ஒரு சதுரடி 4600-5100 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1000 முதல் 1200 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 51.4 முதல் 55.4 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
கேஆர் புரம் : ஒரு சதுரடி 4600-5100 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1100 முதல் 1300 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 55.6 முதல் 59.6 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
யெலஹங்கா : ஒரு சதுரடி 4750-5100 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1100 முதல் 1200 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 54.8 முதல் 59.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
தனிசந்திரா சாலை : ஒரு சதுரடி 5100-5400 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1050 முதல் 1250 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 58.0 முதல் 62.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
பன்னர்கட்டா சாலை : ஒரு சதுரடி 5400-5900 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1000 முதல் 1300 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 63.0 முதல் 67.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
50 லட்சம் ரூபாய்க்குக் கீழ்
சந்தாபுரா : ஒரு சதுரடி 3350-3775 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 550 முதல் 650 சதுரடி கொண்ட 1BHK வீட்டை 19.3 முதல் 23.3 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் 2 : ஒரு சதுரடி 3500-3850 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 900 முதல் 1050 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 34.0 முதல் 38.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
ஹென்னூர் – பாகலூர் சாலை : ஒரு சதுரடி 3600-4200 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 900 முதல் 1000 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 35.1 முதல் 39.1 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் 1 : ஒரு சதுரடி 3800-4000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 1000 முதல் 1100 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 39.0 முதல் 43.0 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
தேவனஹல்லி : ஒரு சதுரடி 4000-4200 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 950 முதல் 1000 சதுரடி கொண்ட 2BHK வீட்டை 39.0 முதல் 42.5 லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.
Where and How Much a house cost in Bengaluru important location
Where and How Much a house cost in Bengaluru important location பொங்களூரில் சொந்த வீட்டை எங்கு வாங்கலாம்..?! என்ன விலை நிலவரம்..?!