மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு வேலைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் செயலி ஒன்றை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
விதான் பவன் கமிட்டி ஹாலில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ‘மஹா யுவா’ என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களான சுபாஷ் தேசாய், அனில் பராப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த செயலியில், மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தகவல்கள் இருக்கும். பட்டதாரி ஒருவர் ஆப்பின் உள்ளே சென்று தனது சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும் மற்றும் அவர்களது சிறந்த பகுதி மற்றும் ஆர்வமுள்ள பகுதிகள் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் ஆப்பில் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. கொச்சி விமான நிலையத்தில் 225 பவுன் கடத்தல் தங்க பிஸ்கெட் பறிமுதல் – 3 பயணிகள் சிக்கினர்