சென்னை: அரசு பள்ளிகளில் படித்து வரும, 1,480 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்க கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு பதவி ஏற்றதும், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பல்வேறு சலுகைகள், பெண் கல்விக்கு ஊக்கத்தொகை உள்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டிருந்தது. அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டருந்தது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வீதம் மாவட்டத்திற்கு 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தமாக 1480 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
வெற்றி பெற்றவர் மாணவர்ககளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 29.60 லட்சம் ரூபாய் நிதி பள்ளிகளில் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.