உலகளவில் பிரபலமான இணைய வார்த்தை புதிர் விளையாட்டு தான் ‘
Wordle
‘. செய்தித்தாள்களில் குறுக்கெழுத்து விளையாடி விளையாடி தேய்ந்து போன கைகளை, இந்த இணையதளம் வெகுவாக ஈர்த்தது. தினமும் 5 எழுத்துகள் கொண்ட ஒரு வார்த்தையை போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நியூயார்க் நகரத்தில் மென் பொறியாளராக பணியாற்றிவரும் ஜோஷ் வோர்டில்-இன் இந்த வார்த்தைப் புதிர் விளையாட்டு, தற்போது உலகளவில் பல கோடி மக்களால் விளையாடப்படுகிறது. ‘இங்க பாரு… நானும் ஜெய்ச்சுட்டேன்’ என்று தங்களின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பெருமை கொள்வதும் உண்டு.
Wordle-இன் கடைசி நாள்
இந்நிலையில், இந்த வார்த்தை புதிர் விளையாட்டு முடிவுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த நாளையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் Wordle விளையாட்டு பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நாளில் இருந்து புதிய வார்த்தைகள் வெளியிடப்படாது. Wordle முகப்பு பக்கம் மட்டும் காட்சிக்கு இருக்கும்.
கிடைத்த தகவல்களின்படி, அக்டோபர் 20,2027 அன்று வெளியாகும் வார்த்தை தான்,
வோர்டில்
புதிர் விளையாட்டின் கடைசி வார்த்தையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. வோர்டில் தற்காலத்தில் பல வளர்ச்சியைக் கண்டுள்ளது.
உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவம்!
நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம், இந்த புதிர் விளையாட்டின் உரிமையை வாங்கி பல வார்த்தைகளை Customஆக உருவாக்கும் அம்சத்தினை வழங்கியது. இதன் காரணமாக இந்த வார்த்தை விளையாட்டு அழிந்து போகாது என்றாலும், பாரம்பரியமான 5 வார்த்தை வோர்டில் விளையாட்டு காலாவதி ஆகிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
வேர்டில் விளையாடுவது எப்படி
இந்த இணைப்பிற்குச்
https://www.powerlanguage.co.uk/wordle/
சென்று நாம் வோர்டில் வார்த்தைப் புதிர் விளையாட்டை விளையாட முடியும். 5 கட்டங்கள், அதாவது 5 எழுத்துகள் உள்ள வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை உருவாக்கப்படும். அதனை கண்டுபிடிக்க 6 வாய்ப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாய்ப்புகளில் நீங்கள் உள்ளிடும் வார்த்தையில் இருக்கும் சரியான எழுத்துகள் திரையில் வெவ்வேறு நிறங்களில் சுட்டிக்காட்டப்படும்.
அதாவது, நீங்கள் உள்ளிடும் வார்த்தை ‘பச்சை’ நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டால், அது சரியான இடத்தில் அமைந்திருக்கிறது என்று பொருள். பிறகு நீங்கள் அந்த கட்டத்தை விடுத்து, வேறு கட்டங்களை சரியான எழுத்துகள் கொண்டு நிரப்ப வேண்டும்.
என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!
நீங்கள் உள்ளிடும் வார்த்தையில் சரியான எழுத்துகள் உள்ளது; ஆனால் சரியான இடத்தில் இல்லை என்றால், அந்த எழுத்துகள் ‘மஞ்சள்’ நிறத்தில் சுட்டிக்காட்டப்படும். தவறான எழுத்துகள் உள்ளிடும் போது, அவை ‘சாம்பல்’ நிறத்தில் சுட்டிக்காட்டப்படும்.
தமிழில் வோர்டில் விளையாட்டை விளையாடலாம்
Wordle Tamil – A daily word game (solladal.github.io)
Custom Wordleஐ உருவாக்கும் வழிமுறைகள்
https://mywordle.strivemath.com/ என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்அதில் தோன்றும் பக்கத்தில் வார்த்தையை உள்ளிட வேண்டும்
மேலதிக செய்திகள்:
போன்ல போட்டோ அழிஞ்சுபோச்சா – ஈஸியா மீட்க சில எளிய வழிகள்ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது வெரி சிம்பிள்!Google Maps உதவியுடன் ரயிலின் Live Status-ஐ தெரிந்து கொள்ளலாம்!
அடுத்த செய்திரெட்மியுடன் மோதும் Oppo K10 – 50MP கேமராவுடன் அறிமுகம்!