இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைன்சி வர்த்தக நாளான இன்று, சற்று சரிவிலேயே காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்தது. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய பங்கு சந்தையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
இந்திய சந்தையினனை பொறுத்தவரையில் இன்று கடைசி வர்த்தகக நாள் என்பதால், புராபிட் புக்கிங் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. தற்போது நிலவரம் என்ன தெரியுமா?
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங்க் சந்தையிலேயே தடுமாற்றத்தில் காணப்பட்ட சந்தையானது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 188.51 புள்ளிகள் குறைந்து, 57,784.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 46.70 புள்ளிகள் குறைந்து, 17,269.50 புள்ளிகளாகவும் தொடங்கியது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்றவை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், டாடா கன்சியூமர் புராடக்ஸ், மாருதி சுசுகி, டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே டைட்டன் நிறுவனம், மாருதி சுசுகி, டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.01 மணி நிலவரப்படி, தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது சென்செக்ஸ் 45.62 புள்ளிகள் அதிகரித்து, 57,641.30 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.45 புள்ளிகள் அதிகரித்து, 17,242.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
opening bell: indices trade flat amid high volatility, nifty trade nearly 17,200
opening bell: indices trade flat amid high volatility, nifty trade nearly 17,200/ முதலீட்டாளர்கள் குழப்பம்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன தான் காரணம்..!