UP Ministers Update : உத்திரபிரதேச மாநிலத்தில் 2-து முறையாக ஆட்சியை பிடித்துள்ள யோகி ஆதித்யநாத், இன்று தனது 52 பேர் கொண்ட அமைச்சரவை குழுவுடன் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்த அமைச்சரவையில், இரண்டு துணை முதலமைச்சர்கள், 16 கேபினட் அமைச்சர்கள், 14 இணை அமைச்சர்கள் (சுயேச்சைப் பொறுப்பு) மற்றும் 20 மாநில அமைச்சர்கள் அடங்கும்.
மேலும் இந்த அமைச்சரவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மா மற்றும் முன்னாள் கேபினட் அமைச்சர்கள் சித்தார்த் நாத் சிங் மற்றும் மகேந்திர சிங் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்னர்.
ஆதித்யநாத் தனது முந்தைய ஆட்சியைப் போலவே, இரண்டு துணை முதல்வர்களை தேர்வு செய்துள்ளார். இதில் கடந்த ஆட்சியில், சட்ட அமைச்சரும், முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான பிரஜேஷ் பதக், முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்குப் பதிலாக துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் புதிய அமைச்சரவையில், ஐந்து பெண் அமைச்சர்கள் உள்ளனர். இதில் பேபி ராணி மவுரியா கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராகவும், குலாப் தேவி இணை அமைச்சராகவும் பொருப்பேற்றுள்ள நிலையில், பிரதிபா சுக்லா, ரஜினி திவாரி மற்றும் விஜய் லக்ஷ்மி கௌதம் ஆகியோர் அமைச்சர்களாக தேர்வு செய்யபப்ட்டுள்ளனர்.
இந்த அமைச்சரவை பட்டியலில், இரண்டு முன்னாள் அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் சர்மா கேபினட் அமைச்சராக சேர்க்கப்பட்டார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசிம் அருண் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கண்ணாஜ் தொகுதியில் போட்டியிட அருண் விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
52 பேர் கொண்ட பட்டியலில் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 19 அமைச்சர்கள் உள்ளனர். இந்த ஒபிசி பிரிவில், மூன்று ஜாட்கள் – கேபினட் அமைச்சராகத் தக்கவைக்கப்பட்ட லக்ஷ்மி நாராயண் சவுத்ரி மற்றும் கடந்த ஆட்சியில், இருந்த பூபேந்திர சிங் சவுத்ரி ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். முன்னாள் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்வாதி சிங் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் தயாசங்கர் சிங் துணைவேந்தராக (சுயேச்சை பொறுப்பு) பதவியேற்றார்.
அமைச்சர்கள் குழுவில் இரண்டு பூமிஹார்களைத் தவிர ஏழு பிராமணர்களும் ஏழு தாக்கூர்களும் உள்ளனர். கேபினட் அமைச்சர் பேபி ராணி மவுரியா, இரண்டு இணை அமைச்சர்கள் அசிம் அருண் மற்றும் குலாபோ தேவி உட்பட எட்டு தலித் அமைச்சர்கள் மற்றும் தினேஷ் காடிக், மனோகர் லால் கோரி, சுரேஷ் ராஹி, அனுப் வால்மீகி மற்றும் விஜய் லக்ஷ்மி கௌதம் ஆகிய ஐந்து அமைச்சர்கள் உள்ளனர்.
ஆதித்யநாத்தின் முந்தைய அமைச்சரவை போன்று இப்போதும் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சர் மட்டுமே உள்ளார். முந்தைய ஆட்சியில், அமைச்ராக இருந்த மொஹ்சின் ராசாவுக்குப் பதிலாக 32 வயதான முகமது டேனிஷ் ஆசாத் வந்துள்ளார்.
கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜிதின் பிரசாத், தற்போது கேபினட் அமைச்சராக உள்ள நிலையில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் பதவி வகித்து பாஜகவில் இணைந்த நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் அகர்வால் தற்போது கேபினட் அமைச்சராக உள்ளார். முன்னாள் பாஜக பிரமுகரும், முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பேரனுமான சந்தீப் சிங்கும் மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சந்தீப்பின் தந்தை ராஜ்வீர் சிங் பாஜக எம்பி ஆவார்.
ஆதித்யநாத் அமைச்சரவையில், அமலாக்க இயக்குனரகத்தின் (ED) முன்னாள் அதிகாரி ராஜேஷ்வர் சிங்குக்கு இடம் கிடைத்தது பற்றி அதிகம் பேசப்பட்ட நிலையில், லக்னோவில் உள்ள சரோஜினி நகரில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 52 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில் இல்லை.
கேசவ் மவுரியா மற்றும் பதக் தவிர, தக்கவைக்கப்பட்ட அமைச்சர்களில் சூர்யா பிரதாப் ஷாஹி, சுரேஷ் கண்ணா, லக்ஷ்மிநரேன் சவுத்ரி, நந்தி என்ற நந்திகோபால் குப்தா, அனில் ராஜ்பார், கபில்தேவ் அகர்வால், ரவீந்திர ஜெய்ஸ்வால், சந்தீப் சிங், கிரிஷ் யாதவ் மற்றும் பல்தேவ் சிங் அவுலாக் ஆகியோர் உள்ளனர்.
“ “