ரஷ்யா உடனான டீலிங்.. நமக்கு எதுக்கு வம்பு, ஒதுங்கி நிற்கும் இந்திய வங்கிகள்..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது தடை விதித்த காரணத்தால், இந்திய வங்கிகள் மற்றும் ரஷ்ய வங்கிகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது.

மார்ச் 31 கடைசி நாள்.. கட்டாயம் செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்.. மறந்து விடாதீர்கள்..!

இந்நிலையில் இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இரு நாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றம் குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ வழிமுறையை வெளியிடவில்லை.

SWIFT பணப் பரிமாற்றம்

SWIFT பணப் பரிமாற்றம்

அமெரிக்கா, ஐரோப்பா எனப் பல வல்லரசு நாடுகள் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதித்த காரணத்தால் SWIFT பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் குறித்து எவ்விதமான அப்டேட்டும் கிடைப்பது இல்லை.

IDFC First வங்கி

IDFC First வங்கி

மேலும் SWIFT பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் முன்பு அனுப்பப்பட்ட பணமும் தற்போது பல இந்திய கணக்குகளுக்கு வந்து சேரவில்லை, இதை முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இப்பணத்தைப் பெற முடியும். IDFC First வங்கியின் சில பணப் பரிமாற்றம் இத்தகையைப் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

Sberbank மற்றும் Gazprombank
 

Sberbank மற்றும் Gazprombank

இதேபோல் டாலர் அல்லாத நாணய வழியில் பணத்தைப் பரிமாற்றம் செய்வதிலும், உதாரணமாக ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank மற்றும் Gazprombank ஆகியவற்றின் மூலம் இந்திய வங்கிகளும் பணம் அனுப்புவதிலும் தற்போது பிரச்சனைகள் எழுந்துள்ளதாக வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் ரிசர்வ் வங்கி

அரசு மற்றும் ரிசர்வ் வங்கி

இந்தியா ரஷ்யா இடையே பணப் பரிமாற்றம் செய்வதில் பல பிரச்சனைகள் எழுந்துள்ள காரணத்தால், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்காக அனைத்து வங்கிகளும் காத்திருக்கிறது. இதனால் ரஷ்யாவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பல நிறுவனங்கள் பணத்தைப் பெற முடியாமல் உள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

மேலும் எஸ்பிஐ ரஷ்யா தொடர்பான அனைத்துப் பணப் பரிமாற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வரும் வரையில் ரஷ்யா உடனான அனைத்துப் பணப் பரிமாற்றத்தையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.

தடை

தடை

இதையும் மீறி ரஷ்ய வங்கிகளுடன் இந்திய வங்கிகள் பணப் பரிமாற்றத்தைச் செய்தால் மேற்கத்திய நாடுகளின் தடையை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படலாம், இதேபோல் இந்திய அரசும் தத்தம் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதனால் நமக்கு எதற்கு வம்பு என இந்திய வங்கிகள் ஒதுங்கி நிற்கிறது.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இந்திய வங்கி அசோசியேஷன் அதிகாரிகள் ஆகியோர் எஸ்பிஐ வங்கி தலைமையில் முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது இக்கூட்டத்தில் சர்வதேச பணப் பரிமாற்ற சந்தையில் இருக்கும் சில ஓட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை அனுப்ப முயற்சி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பேங்க் ஆப் ரஷ்யா

பேங்க் ஆப் ரஷ்யா

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேங்க் ஆப் ரஷ்யாவின் SPFS என்னும் நிதியியல் மெசேஜிங் சேவையை இந்திய வங்கிகள் பயன்படுத்தி இந்தியா, ரஷ்யா மத்தியில் பணபரிமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் SWIFT உதவி இல்லாமல் ரூபாய் மற்றும் ரூபிள் வாயிலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்யமுடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian banks avoids Russia financial transaction, awaiting for Govt, RBI formal guidance

Indian banks avoid Russia financial transaction, awaiting for Govt, RBI formal guidance ரஷ்யா உடனான டீலிங்.. நமக்கு எதுக்கு வம்பு, ஒதுங்கி நிற்கும் இந்திய வங்கிகள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.