உக்ரைன் – ரஷ்யா பதற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும், ரஷ்யா மீது கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது.
குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் பைடன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவுக்கு பெரியளவிலான தாக்கம் எதுவும் இல்லை எனலாம். எனினும் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தடைகள், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?!
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் ரஷ்யாவிடம் இருந்து பெரியளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய வேண்டும். வெறுமனே அமெரிக்கா மட்டும் தடை செய்துள்ளதால் , அதனால் ரஷ்யாவுக்கு பெரும் பாதிப்பு இருக்காது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கும்
ஆரம்பத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி தடை செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறி வந்த ஐரோப்பிய நாடுகள், இதுவரையில் இது குறித்த அறிவிப்பினை வெளியிடவில்லை.
உண்மையில் ரஷ்யாவுக்கு எதிராக தடை விதித்தால் அது ரஷ்யாவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது உண்மை தான். ஆனால் ரஷ்யாவினை விட ஐரோப்பிய நாடுகள் தான் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி
ஏனெனில் ஐரோப்பிய நாடுகள் தங்களது இயற்கை எரிவாயு தேவையில் 40%மும், கச்சா எண்ணெய் தேவையில் 27% மும் ரஷ்யாவில் இருந்தே இறக்குமதி செய்கின்றன. ஆக இதனை தடை செய்யும்பட்சத்தில் 27 நாடுகளும் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இதனால் பொருளாதார தடை உட்பட பல தடைகளை விதித்து வந்தாலும், எரிபொருள் மீதான தடையை இன்று வரையில் விதிக்கவில்லை.
உடன்பாடு இல்லை
மாறாக ரஷ்ய எண்ணெய்யை புறக்கணிக்கும் திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உடன்படாததை தொடர்ந்து, கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலை சரிவினைக் கண்டது. இரண்டாவது நாளாக கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 1.17 மணி நிலவரப்படி, 0.81% குறைந்து, 118.03 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் இன்றும் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
WTI கச்சா எண்ணெய்
இதே WTI கச்சா எண்ணெய் விலையானது 1.07% குறைந்து, 111.18 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையும், இன்றைய குறைந்தபட்ச விலையும் 110.61 டாலராக உள்ளது. ஆக இதனை உடைக்கும் பட்சட்தில் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் என்ன நிலவரம்?
இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 170 ரூபாய் குறைந்து, 8496 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கட்னத அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக கச்சா எண்ணெய் விலையானது இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சனை தான்
ஐரோப்பிய நாடுகள் தற்போதைக்கு உடன்பாட்டினை எட்டவில்லை என்றாலும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதை, மற்ற நாடுகளில் இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகின்றது. ரஷ்யாவில் செய்வதை மற்ற நாடுகளில் விரிவாக்கம் செய்யும்போது, ரஷ்யாவில் இருந்து தடை செய்வதாக தெரிவித்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவுக்கு தற்போதைக்கு பிரச்சனை இல்லை எனலாம். எனினும் EU நாடுகள் கூறுவது போல எதிர்காலத்தில் மற்ற நாடுகளில் வாங்க முற்பட்டால், அது ரஷ்யாவுக்கு பிரச்சனை தான்.
crude oil price fall second day as EU fails to boycott Russian oil
crude oil price fall second day as EU fails to boycott Russian oil/பின் வாங்கிய ஐரோப்பிய ஒன்றியம்.. ரஷ்யா செம ஹேப்பி.. 2வது நாளாக சரிவில் கச்சா எண்ணெய் விலை..!