விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்துவிட்டாரா? ரஷ்யாவில் சர்ச்சையை கிளப்பிய தகவல்



ரஷ்யாவின் முக்கிய அரசியல்வாதியாக கருதப்பட்டு வந்த விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ரஷ்யாவின் மிக முக்கிய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியும், டுமா மாநில நிர்வாகியுமான விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இதனை ரஷ்யாவின் செனட்டர் அலெக்சாண்டர் ப்ரோனுஷ்கின்(Alexander Pronushkin) உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்தநிலையில், டுமா மாநில நிர்வாகி விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி இறந்து விட்டதாக வெளியான தகவலை டுமா மாநில தலைவர் வியாசஸ்லாவ் வோலோடின்(Vyacheslav Volodin) மறுத்துள்ளார், மேலும்
ஜிரினோவ்ஸ்கி இறக்கவில்லை ஆனால் மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஜிரினோவ்ஸ்கி இறப்பு குறித்து போலியான தகவலை பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பான புகாரை ரஷ்ய ஜெனரல் அலுவலகத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வழங்கியுள்ளது.

மேலும் ஜிரினோவ்ஸ்கி இறப்பு குறித்து வதந்தி பரப்பிய செனட்டர் ப்ரோனுஷ்கின் உடனடியாக பதவி விலக வேண்டும் என டுமா மாநில சபாநாயகர் வோலோடின் கருத்து தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி ரஷ்ய அரசியலின் முகமாக விளங்கும் இவர், மேற்கத்திய நாடுகளின் எதிர்பாளராகவும் நீண்டகாலமாக பார்க்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.