உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட இரகசியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அ,ம்பலமாகிவருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து நான்கு வாரங்களாகியுள்ளன.
மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தங்கள் பலத்தை நிரூபிப்போம் என களமிறங்கிய ரஷ்யா தற்போது 30 நாட்கள் கடந்தும் உக்ரைனில் போரிட்டு வருகிறது.
ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராகவும், அவருக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள், நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவர் மீதும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், விளாடிமிர் புடினின் மொத்த சொத்துமதிப்பு உள்ளிட்ட அவரது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அம்பலமாகி வருகிறது.
விளாடிமிர் புடினின் காதலி என கூறப்படும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றவும் ரஷ்ய, உக்ரைன் மக்கள் கூட்டாக குரல் கொடுத்து வருகின்றனர்.
விளாடிமிர் புடினிக்க்கு 1 பில்லியன் டொலர் மதிப்பிலான புடின் அரண்மனை என்ற ஒன்றும் 73 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒரு படகும் சொந்தமாக உள்ளது என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, 19 குடியிருப்புகள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள், 700 கார்கள், சுமார் 500,000 டொலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் என பெரும் சேகரிப்பு புடினுக்கு சொந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
விளாடிமிர் புடினின் மொத்த சொத்துமதிப்பு 200 பில்லியன் டொலர் என கூறப்பட்டாலும், அதைவிட பலமடங்கு அதிகமிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
மேலும், புடின் அரண்மனை என அறியப்படும் குடியிருப்பில், அவர் விருந்தினர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை எனவும், அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டும் குறித்த இல்லத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.