Hairstyle idea: அடுத்தமுறை புடவை கட்டும் போது கண்டிப்பா இந்த போனிடெயில் டிரை பண்ணுங்க!

பெண்களையும், கூந்தலையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதானோர் வரை, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதை விட, கூந்தல் நன்றாக இருக்கவும், வளரவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மெனக்கெடுகின்றனர்.

ஆனால், எவ்வளவு தான் தலைமுடி நன்றாக வளர்ந்தாலும், சில நேரங்களில் என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்று குழப்பமாக இருக்கும். அதனாலே பெரும்பாலும் கூந்தலை ஜடை பிண்ணியோ, அல்லது எளிதாக கொண்டை போட்டோ பல பெண்கள் தங்கள் சிகையலங்காரத்தை முடித்துக் கொள்கின்றனர்.

அது மிகவும் வசதியாக இருப்பதால், வேற ஹேர் ஸ்டைல் முயற்சி செய்ய பெண்கள் விரும்புவதில்லை.

அதுவும் குறிப்பாக, புடவை கட்டும் போது, என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்பது பல பெண்களுக்கு புதிராகவே இருக்கும்.

உங்களுக்காகவே, தொழிலதிபர் நேஹா சாஹூ இன்ஸ்டாகிராமில் ஒரு எளிதான போனிடெயில் டுடோரியலைப் பகிர்ந்து கொண்டார், இது வழக்கமான போனிடெயில் போல அல்லாமல், டிரென்டியாக இருக்கும்.  இதை செய்ய சில நிமிடங்களே போதும்.  

இங்கே பதிவைப் பாருங்கள்

தி ஹேலி (The Haelli) என்ற தனது பக்கத்தின் மூலம், நேஹா புடவைகள் தொடர்பான எளிமையான குறிப்புகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார், அதாவது சரியான ப்ளீட்களை எப்படி எடுப்பது, சேஃப்டி பின்களை சரியான வழியில் பயன்படுத்துவது போன்றவை.

நேஹா பரிந்துரைத்த இந்த ஹேர் ஸ்டைலின் படிப்படியான வழிமுறைகளைப் பாருங்கள்.

முதலில் எப்போதும் போனிடெயில் போடுவது போல, உங்கள் கூந்தல் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரு  டிராஸ்பிரான்ட் ஹேர் டை மூலம் கட்டவும். உங்கள் தலைமுடி மிகவும் இறுக்கமாக இழுக்காமல் இருப்பதையும், மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது வீடியோவில் காட்டியபடி, ரப்பர் பேண்டிற்கு மேலே, கூந்தலை சற்று பிரித்து, ஏற்கெனவே போட்டுவைத்த போனிடெயிலை அப்படியே, அந்த இடைவெளியில் லேசாக திணிக்கவும். உங்கள் டிரென்டி போனிடெயில் ரெடி. இறுதியாக உங்கள் கூந்தலை கொஞ்சம் சரிசெய்து, முழுமையான தோற்றத்துக்கு ஒரு ப்ரூச் பின் அல்லது புதிய பூக்கள் வைத்து அலங்கரிக்கவும்.

அடுத்தமுறை புடவை கட்டும் போது, இந்த போனிடெயில் ஹேர் ஸ்டைலை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.