Tamil News Today Live: பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது இம்ரான்கான் அரசு கவிழுமா?

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை’ இன்று லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.67 காசுகளுக்கும், டீசல் 93.71 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.2.28 காசுகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்!

முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக, வியாழன் மாலை துபாய் சென்றார். துபாய் உலகக் கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை இன்று ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முன்னணி தொழில் முனைவோர்களையும் ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News LIVE Updates:

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திடீர் பயணம்!

இந்தியாவுக்கு திடீர் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

வெடிக்கும் பைடன் – புதின் மோதல்!

நேட்டோ உச்சிமாநாட்டில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும். உக்ரைன் போரில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ பதிலடி கொடுக்கும். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இதற்கிடையே, நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். புதினின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

ரஷ்யாவுக்கு எதிராக, ஐ.நா. பொதுசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 140 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்புக்கு ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, சீனா வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.

Live Updates
11:18 (IST) 25 Mar 2022
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஆரம்பம்

விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நான்கு நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:11 (IST) 25 Mar 2022
125% அதிக டி.டி.எஸ். வசூல்

நடப்பு நிதி ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் டி.டி.எஸ் மூலம் வசூல் செய்யப்பட்ட வருமான வரியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 125% கூடுதலானது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

10:59 (IST) 25 Mar 2022
நீதிபதிகளுக்கு மிரட்டல்.. மேலும் ஒருவர் கைது!

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில், ரஹ்மத்துல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சையை சேர்ந்த ஜமால் இஸ்லாம் என்பவரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது.

10:58 (IST) 25 Mar 2022
வீடுகளுக்கு தீ வைத்து 8 பேர் பலி!

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் பலியான வழக்கை உடனடியாக சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

10:58 (IST) 25 Mar 2022
விருதுநகர் பாலியன் வன்கொடுமை வழக்கு!

விருதுநகரில் 22 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார். இந்த வழக்கில் 8 பேர் ஏற்கனவே கைதாகி உள்ளனர்.

10:57 (IST) 25 Mar 2022
கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில், 83 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 21,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:13 (IST) 25 Mar 2022
போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி கிடையாது; ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகளும் ரத்து என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

10:13 (IST) 25 Mar 2022
திண்டுகல்லில் நில அதிர்வு!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொ.கீரனூரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

10:12 (IST) 25 Mar 2022
வடகொரியா ஏவுகணை சோதனை!

உலகின் அனைத்து நாடுகளையும் இலக்காக வைக்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

10:12 (IST) 25 Mar 2022
சோழிங்கநல்லூர் – சிறுசேரி மெட்ரோ திட்டம்!

சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையே மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கான சர்வதேச டெண்டரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியது. 10 கி.மீ தூரத்தில் உயர்மட்ட பாதையாக அமைய உள்ள இத்தடத்தில் 9 ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

09:27 (IST) 25 Mar 2022
சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு விலக்கி அறிவிப்பு!

நடராஜர் கோயிலை மையமாக வைத்து தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை கோட்டாட்சியர் நேற்று பிறப்பித்திருந்தார். தற்போது, தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு!

09:27 (IST) 25 Mar 2022
15 மீனவா்கள் தமிழகம் திரும்பினர்!

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவா்கள் தமிழகம் திரும்பினர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்கள், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வேன் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

08:28 (IST) 25 Mar 2022
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழுமா?

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறும் நிலையில், பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.

08:28 (IST) 25 Mar 2022
‘RRR’ திரைப்படம் இன்று ரீலிஸ்!

ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘RRR’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

08:27 (IST) 25 Mar 2022
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

08:27 (IST) 25 Mar 2022
டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா!

டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்கும் வகையில், டெல்லி மாநகராட்சி திருத்த மசோதாவை, அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

08:27 (IST) 25 Mar 2022
உ.பி. முதல்வராக யோகி இன்று பதவியேற்பு!

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்கிறார். லக்னோவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.