நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, ஓவியப் பயிற்சி, பட்டறை நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி வரவேற்றார்.
இதில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து ஓவிய பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மஞ்சப்பை, மரக்கன்றுகளை வழங்கி அத்துடன் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆகாமல் படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ரபீக், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகம்மது சுல்தான், ஓ.என்.ஜி.சி பொது மேலாளர்கள் மாறன், வி.என்.ராவ், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் நசீரா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் திட்டச்சேரி சித்தமருத்துவர் அஜ்மல்கான் கபசுர குடிநீர் வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.