அரை இட்லி கூட சாப்பிடாமல் 7 நாட்கள்… எஸ்.ஏ.சி நிஜக் கதை!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் அப்பாவும் ஆன, எஸ்.ஏ.சந்திரசேகரன், ’யார் இந்த எஸ்.ஏ.சி’ எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் தான் கடந்து வந்த பாதைகளை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் எஸ்.ஏ.சி. நள்ளிரவில் பாண்டி பஜார் சாலையில் எந்த வசதியும் இல்லாமல் ரோட்டில் படுத்து தூங்குவதை வீடியோவாக எடுத்து’ யூடியூபில் பகிர்ந்தார். தான் சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தபோது, யார் ஆதரவுமில்லாமல், இந்த சாலையில் தான் பல நாட்கள் படுத்து உறங்கிய நினைவுகளை அப்போது எஸ்.ஏ.சி பகிர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து இப்போது, மீண்டும் எஸ்.ஏ.சி தன் பழைய சினிமா நியாபகங்களை வீடியோவாக எடுத்து, அதை தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.ஏ.சி’ சினிமாவ விட்டு போயிடலாமா? என தன்னைத் தானே கேட்க, வீடியோ ஆரம்பமாகிறது. எந்த கனவோட வந்தமோ, அது நிஜமாகாம திரும்ப போக வாய்ப்பே இல்லை. கையில காசு இல்ல. ஆனா பிடிவாதம், அந்த பிடிவாதம் தான் இன்னும் அப்படியே இருக்கு.

சாப்பிடல, படுத்துட்டேன். அடுத்த நாள் காலையில எழுந்தேன். அப்படியே கொஞ்சம் நேரம் உட்காந்து பாக்குறேன். புரியல, ரொம்ப முயற்சி பண்ணனும்.

வழக்கம்போல அந்த கார்பிரேஷன் பைப்’ல குளிச்சேன். தண்ணிய குடிச்சேன். வயிறு நிறைய தண்ணிய குடிச்சேன். டி.நகர். கோடம்பாக்கம், அடையாறுனு அலைவேன். பசியெடுக்கும் போதெல்லாம், அப்பப்போ அங்கங்க தண்ணிய குடிப்பேன்.

இப்படியே, எழு நாள் ஒரு அரை இட்லி கூட சாப்பிடமா நான் உயிரோட இருந்துருக்கேன். நான் ஏதோ பில்டப் பண்றேனு நினைக்காதீங்க! இதெல்லாம் சத்தியம்.

வீட்டுல நான் 12 இட்லி வரை சாப்பிடுவேன். என் அம்மா கண்ணு பட்டுரும்னு ஒவ்வொரு இட்லியா எடுத்து வைப்பாங்க. அப்படி சாப்பிட்ட நான், 7 நாள் வெறும் கார்பிரேஷன் தண்ணிய குடிச்சுட்டு உயிரோட இருந்துருக்கேன். சிவனடிய சேரணும்னு காட்டுல போயி, தவம் இருக்கும் முனிவர்களை போலத்தான், நானும் தவம் இருந்தேன்.

என்னோட அடிமேட் குறிக்கோள் சினிமா, டைரக்டர்தான். இதுதான் என்னுடைய தவம். பசியில காது அடைக்கும்னு சொல்லுவாங்க. அதை நான் உண்மையாவே அனுபவிச்சுருக்கேன். கார் போகுது சத்தம் கேட்கல, ஆட்டோ போகுது சத்தம் கேட்கல, அப்படியும் நான் கோடம்பாக்கம் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தேன்.

அப்பப்போ திரும்பி போயிடலாம்னு லேசா மனசுல தோனும். நான் 10வது படிக்கும் போது என்னோட வாத்தியார் சுப்பராவ், அவரமாதிரி மோட்டிவேஷனலான ஆளு பாக்க முடியாது.

அவர் அடிக்கடி சொல்வாரு.. என்னைக்குமே முயற்சி உன்னைக் கொண்டு போய் நிறுத்தும். இதெல்லாம் தான், என் மனசுல இருந்தது. கோடம்பாக்கத்துல எத்தனை ஸ்டுடியோ இருந்ததோ, அத்தனையிலும் சுத்துனேன்.

டி.நகர்ல பிளாட்ஃபார்ம்-ல படுத்துருந்தேன். எதிர்ல ராஜகுமாரி தியேட்டர் இருக்கும். அப்போ ராஜகுமாரினு பெரிய நடிகை இருந்தாங்க. அவங்க அண்ணன் ராவ் பெரிய டைரக்டர். ஒரே நேரத்துல எம்ஜிஆரையும், சிவாஜியும் வைத்து படமெடுத்த இயக்குனர். அன்னைக்கு இருந்த ரெண்டு ஆளுமைகளையும் ஒன்னா நடிக்க வச்சாரு.

அப்போதான் ஒருநாள் எப்படியோ ராமனாவ்’ பாத்துட்டேன். உடனே போயி கால்லு விழுந்தேன்.. யாருப்பா நீ கேட்டார். நான் என்னைப் பத்தி சொல்லி, நிறைய கதைகள் எழுதி வச்சுருக்கேன். பாருங்க சார் சொன்னேன். அவர் அப்படியே வந்து கார்ல ஏறுனாரு. நான் ஏறுரவரைக்கும் கதை சொல்லிட்டே வந்தேன். அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டார்.

இப்போ என் இது சொல்றேனா, ராஜகுமாரி தியேட்டர் பக்கம் நான் படுத்துருக்கேன். ஆனா, அந்த ராஜகுமாரி தியேட்டர்ல சிவாஜி படம், , எம்ஜிஆர் படம் ஓடும். அவங்க பேசுற வசனம், தியேட்டர்’ல இருந்து வெளியே கேட்கும். அந்த வசனம் அரை தூக்கத்துல இருக்கும்போது, என் காதுல வந்து விழும். எந்த சினிமாவுக்காக, நான் தவம் இருக்கேனோ அந்த சினிமா ஓசை, என்னை அப்படியே ரிஃபிரெஷ் பண்ணும்.

அடுத்த நாள் காலையிலே தைரியத்தோடு எழுந்திருப்பேன். அந்த எனர்ஜிதான் எனக்கு சொல்லும். பயந்து ஓடிடாதே! நீ டைரக்டர் ஆயிடுவே. இப்போதான் நீ ஸ்டெடியா இருக்கனும். திருப்பி வந்து அந்த பிளாட்பாரத்துல தண்ணிய குடிச்சுட்டு உட்காந்துருக்கிறேன். அதே பைப்ல ஒருத்தர் வந்து முஞ்சிய கழுவுறாரு.

முஞ்சிய கழுவிட்டு என்னை பாத்தாரு. யாருப்பா நீ? உன்னை அடிக்கடி இங்கேயே பாக்குறேன். ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோ வாசல உன்னைப் பாத்தேனு சொன்னாரு.. நான் யாருன்னு கேட்டேன். அவர் ஒரு டிரைவர்.

எஸ்.ஏ.சுப்பையானு ஒரு நல்ல நடிகர் இருந்தார். அவரோட டிரைவர். அவர் என்னோட கதையெல்லாம் கேட்டுட்டு’ நாளைக்கு காலையிலே எஸ்.ஏ.சுப்பையா வீட்டுக்கு வா.. உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேனு சொன்னாரு. அப்படியே ஒரு நம்பிக்கை.

அந்த நம்பிக்கையோட அடுத்த நாள் காலையிலே’ எழுந்திருக்கிறேன். அது 8வது நாள். எனக்கு எந்திரிக்க முடியல. நடக்க முடியல. ஆனா, அந்த நம்பிக்கை.

வழக்கம்போல குளிச்சுட்டு, ஃபுல்லா தண்ணிய குடிச்சேன். அந்த நம்பிக்கைய அப்படியே சுமந்துட்டு’ நான் நடந்து போயிட்டு இருக்கேன். ஒரு ஷாக்! அப்படினு என்னவென்று சொல்லாமலே அந்த வீடியோவை முடிக்கிறார் எஸ்.ஏ.சி!

எஸ்.ஏ.சந்திரசேகர் தன் அனுபவங்களை பகிரும் அந்த வீடியோ இதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.