ஆங்கரிங் வாய்ப்பு கேட்டேன் ஆக்டர் ஆக்கி விட்டார்கள்! – விகாஷ்

பாக்கியலெட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்திலிருந்து நடிகர் ஆர்யன் விலகிய பிறகு தற்போது வீஜே விகாஷ் செழியனாக நடித்து வருகிறார். விகாஷ் ஆரம்பத்தில் ராஜ் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வந்தார். நடிப்பு பற்றி துளிகூட ஐடியா இல்லாத விகாஷ் சின்னத்திரையில் சிறந்த வில்லனுக்கான விருதை வென்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

விகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆங்கர் டூ ஆக்டிங் என்ற தனது சுவாரசியான பயணம் பற்றி கூறியுள்ளார். அதில், 'விஜய் டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கேட்டு தான் ஆடிசன் சென்றிருந்தேன். ஆனால், திடீரென உனக்கு நாளை ஷூட்டிங். நடிக்க வந்துவிடு என்று சொன்னார்கள். முதலில் எனக்கு நடிப்பு வராததால் பதட்டமாகவும், குழப்பமாகவும் இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய பெரிய ஆர்டிஸ்டுகள் இருந்தார்கள். எனக்கு நடிக்கவே தெரியவில்லை. எல்லோரும் திட்டினார்கள். மறுபடி மறுபடி நடித்துக்கொண்டிருந்தேன். சிங்கிள் டேக்கில் நடிப்பது என்பது கிட்டத்தட்ட ஆறுமாதம் கழித்து தான் எனக்கு வந்தது. எனது நண்பர்தான் உனக்கு நடிக்க வராது என்று இல்லை. தெரியாது. தெரிந்து கொண்டு செய் என்று ஊக்கப்படுத்தினார். நீலி என்ற தொடரில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானேன். அதோடு அந்த தொடருக்காக சிறந்த வில்லன் விருதும் கிடைத்தது. யார் யாரெல்லாம் என்னை திட்டினார்களோ அவர்களே என்னை இப்போது பாராட்டுகிறார்கள்' என்று கூறியுள்ளார்.

ஆர்யனுக்கு பதில் விகாஷ் செழியன் கதாபாத்திரத்தில் நுழைந்த போது பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது ஆர்யன் போல் உடல் எடையெல்லாம் குறைத்து பிட்னஸை மெயின்டெயின் செய்து வருகிறார். அத்துடன் செழியனாக மக்கள் மனதிலும் இடம்பிடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.