இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 4,100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,30,18,032 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பில் திடீர் உயர்வுக்கு காரணம் என்ன என்பதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது. இதுநாள்வரை , மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கொரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,349 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,80,436 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் தினசரி கொரோனா தொற்று உறுதி விகிதம் 0.25 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா தொற்று உறுதி விகிதம் 0.29 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலை 8 மணிவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 182.87 கோடியைத் தாண்டியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 6,58,489 கோவிட்-19 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, இதுவரை 78.63 கோடி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் 7,99,36,775 மற்றும் 9,76,499 ஆக அமெரிக்கா தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகத் தொடர்கிறது. இந்தியா 4,30,16,372 பாதிப்புகளுடன் இரண்டாவது அதிக பாதிப்பு எண்ணிக்கையில் உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM