புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,660 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 18 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
அதன்படி கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் விடுபட்ட மரணங்கள் சுகாதார பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுபட்ட மரணங்கள் உள்பட 4,007 இறப்புகள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து கொரோனாவால் மேலும் 4,100 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,47,779 பேரும், கேரளாவில் 67,631 பேரும் அடங்குவர்.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 2,349 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 16,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 4,789 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 29,07,479 டோஸ்களும், இதுவரை 182 கோடியே 87 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.