வேலூரில் நிகழ்ந்தது போலவே, இந்தியாவில் வேறு சில பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்தாண்டு டிசம்பரில் ஹரியானா மாநிலம் குருகிராமில் சார்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றியதில், 60 வயது ஆண் உயிரிழந்தார். மும்பையின் அந்தேரி, ஹைதராபாத்திலும் கடந்தாண்டு மின் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தபோது இந்த விபத்துகள் நிகழ்ந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தமிழகத்திலும் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் கடந்தண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம் என்பவரது வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்தது. பல மணி நேரம் சார்ஜ் போட்டதால், இருசக்கர வாகனம் வெடித்து அருகிலிருந்த காரும் தீப்பற்றியது. மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றி, அருகிலிருந்த மற்ற வாகனங்களும் பற்றி எரிந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
மின்சார வாகனங்களே அடுத்த தலைமுறை வாகனங்கள் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், அவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டியதின் அவசியத்தை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM