இந்தியாவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கடுமையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா
தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில்,
முழு ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் பரவும் கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில், மீண்டும் கொரோனா விஸ்வரூபமெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவில் இருந்து
இந்தியா
வரும் பயணிகளை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்துள்ளது. சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று, இந்தியாவுக்கு பரவும் பட்சத்தில், கொரோனா தொற்றின் நான்காவது அலை வீசக் கூடும்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் மாதத்தில், இந்தியாவில் கொரோனா நான்காவது அலை வீச வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்தி”மணி” அடிக்கலாம் வாங்க.. மக்களுக்கு காங்கிரஸ் திடீர் அறைகூவல்!