இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்?| Dinamalar

புதுடில்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேபா வரும் ஏப்., 1 ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். 2ம் தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார். 2021 ல் நேபாள பிரதமரான பின்னர் அவர், முதல்முறையாக வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கு இந்த பயணம் உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.