அமெரிக்க விமானப்படையில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் நெற்றியில் திலகம் அணிந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் தர்ஷன் ஷா. குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க விமானப்படையில் பணிக்கு சேர்ந்தார்.
2 ஆண்டுக்கு பின் அனுமதி
இவர் 2020 ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்ந்தபோதே திலகமிட்டு பணி செய்ய அனுமதிக்கும்படி அவர் உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். பயிற்சி முடிந்து விமான தளத்தில் பணிக்கு சேர்ந்த பிறகு அனுமதி கொடுக்கிறோம் என காலம் தாழ்த்தினர். மனம் தளராமல் காத்திருந்த தர்ஷன் ஷாவுக்கு பிப்ரவரி 22ல் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் நெற்றியில் திலகமிட்டு பணியை தொடர்ந்து வருகிறார்.
இதுகுறித்து தர்ஷன் ஷா கூறியதாவது: விமானப்படைக்கு நன்றி . ‛‛தினமும் நெற்றியில் திலகம் இட்டு பணி செய்ய அனுமதி கோரினேன். தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக எனக்கு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெற்றியில் திலகம் இடும் பழக்கம் எனது தாத்தா,பாட்டியிடம் இருந்து வந்தது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Advertisement