இலங்கயைில் காகித தட்டுப்பாடு; நாளிதழ்கள் நிறுத்தம்| Dinamalar

இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடியால், செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், அங்குள்ள அச்சு ஊடகங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன.

இந்நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் செய்தித்தாள் காகிதங்களின் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால், இலங்கையில் இருந்து வெளியாகும், ‘தி ஐலேண்ட்’ ஆங்கில நாளிதழ், சனிக்கிழமை பதிப்பு வெளியீட்டை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல், சிங்கள நாளிதழான திவைனாவும் தன் வெளியீட்டை நிறுத்தி உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கூட, தி ஐலேண்ட் நிறுவனம், தன் பதிப்புகளை நிறுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.