
இளைய மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் போனிகபூர்
தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனி கபூர் அஜித்தின் 61வது படம் மற்றும் உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது முதல் மகள் ஜான்வி கபூர் 2018ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக போனிகபூரின் இளைய மகளான குஷி கபூரும் சினிமாவில் அறிமுகமாக போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாலிவுட் இயக்குனர் ஜோயா அக்தர் இயக்கும் தி ஆர்ச்சீஸ் என்ற படத்தின் மூலம் குஷி கபூர் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.