பிரித்தானியா வர முயற்சிக்கும் அகதிகளுக்கு விரோதமான சூழலை அரசாங்கம் உருவாக்கி வருவதாக லண்டன் மேயர் சாதிக் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சாதிக் கான் கூறியாவது, லண்டன் பல்வேறு கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கு இடம், நகரம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
லண்டன்வாசிகள் காட்டும் குணத்திற்கும், நாடு முழுவதும் உள்ள பிரித்தானியர்கள் காட்டும் குணத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
எங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சிக்கலான விசா படிவங்கள், அகதிகள் பிரித்தானியா வருவதை மிகவும் கடினமாக்குகின்றன.
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு! ஜப்பான் பிரதமர் பேட்டி
உண்மை என்னவென்றால், பாதுகாப்பு கவலைகள் உள்ள ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நகரங்களில், பல்லாயிரக்கணக்கானோருக்கு புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
நாம்(பிரித்தானியா) ஏன் வித்தியாசமாக இருக்கிறோம்? உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு லண்டனில் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவது மிகவும் எளிதாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
பிரித்தானியா அரசாங்கம் இந்த நடைமுறையை மிக எளிதாக்க வேண்டும், இல்லையெனில், உக்ரேனியர்கள் நாம் உண்மையில் ஒரு விரோதமான சூழலை உருவாக்குகிறோம் என்ற எண்ணத்துடன் வெளியேறுவார்கள் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.