உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் ஜோபைடன் சந்தித்துப் பேசினார்.
நேட்டோ நாடுகள் பங்கேற்றக் கூட்டத்தில் ஐரோப்பா சென்ற ஜோபைடன் அங்குள்ள பெல்ஜியத்திற்குச் சென்றார். அங்கு நேட்டோ நாடுகளின் கூட்டத்தை முடித்துக்கொண்டு உக்ரைனின் அண்டை நாடான போலந்திற்குச் சென்றார். அங்கு தங்கியிருக்கும் தங்கள் நாட்டு வீரர்களின் நலனை விசாரித்த பைடன் ஊக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றும்படி கேட்டுகொண்டார்.
பைடன் சென்ற இடம் உக்ரைனுக்கு அருகிலுள்ள இடம் என்பதால் அவரது வருகையையொட்டி சுற்றுப்பகுதிகளில் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM