உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் புகைப்படம்


 உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.

அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.

மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.

4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறக்குமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தது.

இதனிடையே, மரியுபோல் நகர வாசிகளை தங்கள் நாட்டிற்கு ரஷ்ய படைகள் நாடு கடத்தி வருவதாகவும், நகரல் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டுப்பட்டுள்ளது.

மேலும், மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்ய குண்டு போட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, மரியுபோலில் உள்ள பிரசவ மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் சர்வதேச அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரின் புகைப்படும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், நகரம் முழுவதும் சிதைந்து, கட்டிடங்கள் நொறுங்கி, ஆங்காங்கே கரும் புகை வருவதை காட்டுகிறது.                          



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.