ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆதரவாக ஜெர்மனி அனுப்பிவைத்த 1,500 “Strela” விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனை வந்தடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 31வது நாளாக தாக்குதல் நடத்தியும் இன்னமும் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரான மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற முடியாமல் திணறிவருகிறது.
பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் தீர்வுகள் மற்றும் சமாதான உடன்படிக்கைகள் ஏதும் இதுவரை ஏற்படாததால் வரும் நாள்களில் இந்த நகரங்களின் மீதான தாக்குதலலை ரஷ்ய ராணுவம் தீவரப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
⚡️A shipment of 1,500 “Strela” anti-aircraft missiles and 100 MG3 machine guns from Germany arrived in Ukraine on March 25, according to the German Press Agency, citing the Ukrainian government.
— The Kyiv Independent (@KyivIndependent) March 26, 2022
இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தீவர தாக்குதலை எதிர்த்து சமாளிக்கும் விதமாக உக்ரைனுக்கு 1,500 “Strela” விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், 100 MG3 இயந்திர துப்பாக்கிகளையும் ஜெர்மன் அனுப்பிவைத்துள்ளது.
இவ்வாறு ஜெர்மனி அனுப்பிவைத்துள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுடன் கூடுதலாக, 3,50,000 உணவு பொட்டலங்களும், 50 மருத்துவ உதவி வாகனங்களும் மற்றும் மருந்து பொருட்களும் 25ம் திகதியான நேற்று(வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு வந்து சேர்ந்துவிட்டதாக உக்ரைனில் உள்ள ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.