அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து தலைநகர் வார்சாவில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. தாக்குதல் தொடங்கிய பின் முதன்முறையாக உக்ரைன் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து தலைநகர் வார்சாவில் சந்தித்துப் பேச உள்ளார்.
அந்தச் சந்திப்பின்போது அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ஆகியோரும் உடனிருப்பர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் நடப்பு நிகழ்வுகள், அரசியல், பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்புக் குறித்துப் பேச உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.