உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. கடந்த முறை முதலமைச்சராக இருந்த யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று தலைநகர் லக்னோவில் உள்ள வாஜ்பாய் இகானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உத்தரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல்வராக கேசவ பிரசாத் பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், 50க்கும் மேற்பட்ட ஆன்மீகத் தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் பங்கேற்றனர்.
Hearty congratulations to Thiru. @myogiadityanath on assuming the position of the Chief Minister of Uttar Pradesh. My best wishes to Thiru. @yadavakhilesh on rebuilding the party and assuming the role of vibrant opposition to protect the democratic rights of the people.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் “உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க துடிப்பான எதிா்க்கட்சியின் பங்கை ஏற்று, கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அகிலேஷ் யாதவுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளாா்.