புதுடில்லி: வரும் ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலையை 10.7 சதவீதம் உயர்த்தி கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது.
இதனால், கோவிட் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும். 10.7 சதவீத விலை உயர்வே, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலை ஆகும். இதனால், அத்தியாவசிய பட்டியலில் உள்ள 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை ஏப்., 1 முதல் உயரும்.
இந்த பட்டியலில் உள்ள பராசிட்டாமல், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், கோவிட் தொற்றால் மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் உள்ளன.
புதுடில்லி: வரும் ஏப்ரல் 1 முதல் வலி நிவாரணிகள், நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விலையை 10.7 சதவீதம் உயர்த்தி கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது.இதனால்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.