லக்னோ: உ.பி.,யில் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
உ.பி.,யில் நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. தொடர்ந்து இன்று காலை, புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஏழைகளுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதம் நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் மார்ச் மாதத்துடன் நிறைவு பெற இருந்தது. இதனால் 15 கோடி பேர் பயன்பெற்று வந்தனர். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், அந்த திட்டத்தை மேலும் 3 மாதம் நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.
துணை முதல்வர் சேகவ பிரசாத் மவுரியா கூறுகையில், இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு அரசு ரூ.3,270 கோடி செலவு செய்ய உள்ளதாக கூறினார்.
லக்னோ: உ.பி.,யில் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.உ.பி.,யில் நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் புதிய அமைச்சரவை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.