ஒடிசா மாநிலம் மாயூர்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரடி நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் ஓடி ஒளிந்தனர்.
சிலர் துணிந்து கம்புகளுடன் கரடியை விரட்டினர். கரடி ஊருக்குள் புகுந்து விட்டதால் அதை செல்போனில் படம் எடுத்து வைத்த ஊர் மக்கள் அதனை விரட்ட முயற்சி செய்தனர். அந்தக் கரடிக்கு வயதாகி விட்டதால் ஓட முடியவில்லை என்றும் அதன் உடல் நலம் இல்லை என்றும் சிலர் தெரிவித்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் அது அமர்ந்துவிட்டது. இதைக் கண்ட ஊர் மக்கள் அதை விரட்டுவதை விட்டு விட்டனர். பின்னர் அது காட்டுக்குள் போய் விட்டதாகவும் கூறினர்.தகவல் அறிந்த வனத்துறையினர் கரடியைத் தேடிச் சென்று காட்டில் உள்ள குகை ஒன்றில் கரடியின் உயிரற்ற உடலைக் கைப்பற்றினர்.