மும்பை,
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது.
இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன அதற்கு முன்பு ஐபிஎல் 2022 தொடருக்கான தொடக்க விழா நடைபெற இருக்கிறது .
இந்த விழாவில் கடந்த டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக்க்கில் பதக்கம் வென்ற வீரர் ,வீராங்கனைகள், பிசிசிஐ சார்பில் பாராட்டு தெரிவித்துஅவர்களை கவுரவிக்கக் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும் இந்த விழாவில் இந்திய ஹாக்கி அணியின் ஆண்கள் மற்றும் மகளிர் அணியின் சில வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது