புவனேஷ்வர்:
ஒடிசாவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள், கார்ப்பரேட்டர்கள், தலைவர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பை தேர்தல் ஆணையம் உயர்த்தியது.
இந்நிலையில், ஒடிசாவில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தமுள்ள 108 இடங்களில் 95 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
மேலும், பா.ஜ.க. 6 இடத்திலும், காங்கிரஸ் 4 இடத்திலும், சுயேட்சை 3 இடங்களிலும் வென்றன.
இந்த வெற்றி குறித்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறுகையில், எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்.. 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது