தோகா,
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்நாடு மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் மீது 31-வது நாளாக ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. அசுர பலம் கொண்ட ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே, தனது நாட்டுக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, எரிசக்தி வளம் மிக்க நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ரஷ்ய எரிசக்தி விநியோக இழப்புக்கு ஈடு கொடுக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.