தமிழக முதல்வர் ஸ்டாலின் காமராஜரை போல் நல்லவர். நல்ல முதல்வராக அவர் செய்யும் முயற்சிகளை ஆதரித்து அவர் கூடவே பயணிக்க விரும்புவதாக பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
தென்னிந்திய புத்தக பதிப்பகம் மற்றும் விற்பனையாளர் சங்கத்துடன் இணைந்து நெல்லை மாவட்ட நிர்வாகம், இணைந்து நெல்லையில் 5-வது புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது. கடந்த 17-ந் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா நாளை வரை (மார்ச் 27) நடைபெற உள்ள நிலையில், இந்த புத்த திருவிழாவில், லட்சக்கணக்காக புத்தகங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக திருவிழாவில் பிரபல பேச்சாளரும் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆதரவாளருமான நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், காமராஜரைப்போல் முழு நல்லவனாக உருவாகிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நல்ல முதல்வர் நிறைய முயற்சி செய்கிறார். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தில் குழந்தைகள் 6 வயதிற்குள் பள்ளிக்கு அனுப்ப கூடாது என்று ஆணை பிறப்பிக்க வேண்டும். இதனை பிறப்பித்து குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள். குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள். இந்த பள்ளிக்கூடங்கள் முளையிலேயே சுருங்கிவிடும்.
அதேபோல் புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை எதிர்த்தவன் நான் புத்தகம் என்பது வடமொழி. இதனை படைப்பாளிகள் சங்கம் என்று அறிவிக்க கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்கி அதனை படிக்க வேண்டும். எது தேவையே அதை மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ “