கோலாகலமாக தொடங்கும் ஐ.பி.எல். 2022; முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – கேகேஆர் மோதல்

IPL 2022 Live Match CSK vs KKR, Live score updates in tamil: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் இன்று சனிக்கிழமை மாலை (26 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2022 தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடுகின்றன. இதனால் போட்டியின் மோதல் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரில் முதலாவது லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் நீண்ட கால கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜாவிடம் தனது பதவியை ஒப்படைத்தார். கேகேஆர் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக அறிமுகமாகிறார்.

எனவே புதிய கேப்டன்களுடனும், சில புதுமுக வீரர்களுடனும் சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் களமிறங்குகின்றன. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே தொடரை வெற்றியுடன் துவங்க தீவிரம் காட்டும். அதற்கு முட்டுக்கட்டை போட கேகேஆர் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது லீக் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   26 March 2022

Chennai Super Kings 

vs

Kolkata Knight Riders  

Match Yet To Begin ( Day – Match 1 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.