அதிகரித்து வரும் கோழித் தீவனப் பொருட்களின் விலைகள் காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, டொலர் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.
அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல விவசாயிகள் வியாபாரத்திலிருந்து விலகி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய கடன் வழியாக 1,000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குணசேகர கூறினார்.
கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல பெரிய அளவிலான நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள அந்தந்த தாய் நிறுவனங்களிடமிருந்து கடன் வழியாக இறக்குமதி செய்வதன் மூலம் மூலப்பொருட்களின் விநியோகத்தை பூர்த்தி செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வியாபாரம் இல்லாமல் தவித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.