சத்தீஸ்கரில் அவலம்: இறந்த மகளின் உடலை 10 கி.மீ தொலைவிற்கு தூக்கிச் சென்ற தந்தை!

இறந்த மகளின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு தந்தை தோளில் சுமந்து நடந்தே சென்ற வீடியோ கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஈஸ்வர் தாஸ். கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமியின் உடலில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. சுகாதார மருத்துவ மையத்தில் அவளது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியும் மருத்துவர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.

Surguja: Chhattisgarh Health Min TS Singh Deo orders probe after video of a man carrying body of his daughter on his shoulders went viral

Concerned health official from Lakhanpur should have made the father understand to wait for hearse instead of letting him go, Deo said(25.3) pic.twitter.com/aN5li1PsCm
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 26, 2022

இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரியுள்ளனர். “மற்றொரு சடலம் விரைவில் வரும். அதுவரை காத்திருங்கள்” என்று மருத்துவ மையத்தில் இருந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறந்த மகளின் உடலை தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். தனது மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
Dev Singh said party high command will decide on the current situation of  Chhattisgarh
இதையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சிங் தியோ “நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்” என்று தெரிவித்தார். “பணியில் இருந்த சுகாதார பணியாளர்கள் வாகனத்திற்காக காத்திருக்க குடும்பத்தை வற்புறுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.