பண்டிகைக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்பொழுது நிலவும் ரயில் சாரதிகள் மற்றும் சமிக்ஞை பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக புதிய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதி ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.