டெல்லி மாநில அரசு 75 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளதுடன், ஐந்தாண்டுகளில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
டெல்லி சட்டமன்றத்தில் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் நலவாழ்வுக்கு ஒன்பதாயிரத்து 669 கோடி ரூபாயும், கல்விக்கு 16 ஆயிரத்து 278 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் எலக்ட்ரானிக் சிட்டி, சில்லறை விற்பனை, மொத்தவிலைச் சந்தைகள் அமைக்கப்படும் என்றும், இதன்மூலம் ஐந்தாண்டுகளில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.