தங்கம் விலை தொடர்ந்து உயரும்.. சந்தை வல்லுனர்கள் கணிப்பு..!

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை காரணமாக உலக நாடுகளின் முதலீட்டுச் சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, இதோடு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதோடு ரஷ்யா மீதான தடையால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலையற்ற தன்மை நிலவும் காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

தங்கம் மீது முதலீடு

இதனால் உலக நாடுகளின் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும், அதன் அடிப்படையும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாக்க தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

2000 டாலர்

2000 டாலர்

அடுத்த வாரத்தில் சர்வதேச சந்தையில் 1958 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2000 டாலர் அளவீட்டை தாண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தங்கம் விலை சமீபத்தில் தொட்ட 55,558 ரூபாய் அளவீட்டை அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தங்கம் விலை
 

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2000 டாலர் வரையில் என்ன காரணம் என்பது தான் தற்போது அனைத்து தரப்பினரின் மிக முக்கியக் கேள்வியாக உள்ளது. இதேவேளையில் தங்கம் விலை 2000 டாலர் விலையைத் தாண்ட சில முக்கிய விஷயங்கள் நடக்க வேண்டும்.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவிப்பால் கருவூல பத்திரங்கள் மீதான லாபம் அதிகரித்த நிலையிலும் தங்கம் விலை சுமார் 1.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வருகிற மே மற்றும் ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரையில் உயர்த்துவதில் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

2075 டாலர் உச்ச விலை

2075 டாலர் உச்ச விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சமீபத்தில் 2075 டாலர் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது, இதேபோல் கடந்த 7 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1921.45 டாலரில் இருந்து வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1958 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இதன் மூலம் அடுத்த ஒரு வாரம் அல்லது 2 வாரத்திற்குள் தங்கம் விலை 2000 டாலர் வரையில் உயரலாம்.

53000 ரூபாய்

53000 ரூபாய்

இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை 53000 ரூபாய் வரையில் உயரலாம். இதேவேளையில் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கும் இதனால் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இது சிறப்பான முதலீட்டுக் காலமாக உள்ளது.

பெடரல் ரிசர்வ் முடிவு

பெடரல் ரிசர்வ் முடிவு

தற்போது தங்கம் வாங்கி அடுத்த சில வாரத்தில் விற்பனை செய்தால் கட்டாயம் லாபம் கிடைக்கும், ஆனால் இந்த லாபம் பெற தற்போது பெடரல் ரிசர்வ் திட்டமிட்டு உள்ள 0.50 சதவீத வட்டி உயர்வு சாத்தியமானால் மட்டுமே நடக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold price may cross 2000 dollar mark next week amid US fed 50 basic points rate hike

Gold price may cross 2000 dollar mark next week amid US fed 50 basic points rate hike தங்கம் விலை தொடர்ந்து உயரும்.. சந்தை வல்லுனர்கள் கணிப்பு..!

Story first published: Saturday, March 26, 2022, 15:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.