திருப்பதி
திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்த காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான அளவிலேயே நிபந்தனையுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த வகையில், கொரோனா பரவல் குறைந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளதால், பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதுகிறது.
தற்போது ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. அதுதவிர, விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாரி அறக்கட்டளை, சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்களையும்
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
ரத்து செய்துள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், பக்தர்களின் வசதி குறித்து அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று சனி, மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த செய்திபார்லி.யில் கதறி அழுத பாஜக பெண் எம்பி – காரணம் இது தான்!