பொதுத்துறையைச் சேர்ந்த நிலக்கரி நிறுவனங்கள் ஜார்க்கண்ட் மாநில அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு இலட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காவிட்டால், சுரங்கங்களை அரசே எடுத்துக் கொள்ளும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநில அரசின் உரிமைத் தொகையைச் செலுத்தாவிட்டால், நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றித் தடுப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். இது குறித்து ஏற்கெனவே மத்திய நிலக்கரித்துறைக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிக அளவு நிலக்கரி வெட்டியெடுப்பதில் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் உள்ளது.