தற்போது நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் நீரில் மூழ்கி இருந்த பல கட்டிடங்கள், ஆலயங்கள், முதலானவற்றை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நீர்த்தேக்கத்தில் நேற்று (25) 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.
மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 வீத நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 வீத நீரும் விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 வீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 வீதமும் சமனலவெவவில் 14.6 வீத நீரும் எஞ்சியிருப்பதாகவும் பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.