பாய்ந்த தோனி…பதுங்கிய சென்னை : முதல் சவாலில் ஏமாற்றம்| Dinamalar

மும்பை,-ஐ.பி.எல்.,துவக்கபோட்டியில்ஏமாற்றிய சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.தனிநபராக அசத்தியதோனி அரைசதம்விளாசினார்.

இந்தியாவில் 15வது ஐ.பி.எல்., தொடர்நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில்’நடப்பு சாம்பியன்’ சென்னை, கோல்கட்டாஅணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்

சென்னை அணிக்கு பேட்டிங் ‘கிளிக்’ ஆகவில்லை. துவக்க வீரர்களான ருதுராஜ், கான்வே தடுமாறினர். உமேஷ் ‘வேகத்தில்’ ருதுராஜ் ‘டக்’ அவுட்டானார். அடுத்து வந்த உத்தப்பா அசத்தினார். உமேஷ், ஷிவம் மாவி பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். மந்தமாக ஆடிய கான்வே(3 ரன், 8 பந்தில்)சொதப்பினார். வருண் ‘சுழலில்’ ஜாக்சனின் மின்னல் வேக ‘ஸ்டம்பிங்கில்’ உத்தப்பா(28) சிக்கினார்.
நரைன் பந்தை தட்டி விட்ட கேப்டன் ரவிந்திர ஜடேஜா ஒரு ரன் எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் சில அடிகள் எடுத்து வைத்தார். அதற்குள் மறுமுனையில் இருந்த ராயுடு(15) பாதி துாரம் ஓடி வந்துவிட்டார். இதனை பார்த்த ஸ்ரேயாஸ் பந்தை எறிய, பரிதாபமாக ரன் அவுட்டானார். ரசலிடம் ஷிவம் துபே(3) ‘சரண்டர்’ ஆனார்.சென்னை அணி 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 61 ரன்மட்டும் எடுத்ததால், பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது.

தோனி விளாசல்

பின் அணியை மீட்கும் முயற்சியில் ஜடேஜா, தோனி இறங்கினர்.ரசல் வீசிய 18வது ஓவரில் தோனி 3 சிக்சர் விளாச, 14 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஷிவம் மாவி வீசிய ‘நோ-பாலை’ தோனி சிக்சருக்கு அனுப்பினார். அப்போது ‘தல இஸ் பேக்’ என்ற வாசகம் ‘மெகா ஸ்கிரீனில்’ காண்பிக்கப்பட்டது.ரசல் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தோனி, 38 பந்தில் அரைசதம் எட்டினார். 40 வயசானாலும் தனது ‘ஸ்டைலான’ ஆட்டம் மாறவில்லை என்பதை நிரூபித்தார். ரசல் வீசிய கடைசி பந்தை ஜடேஜா சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. தோனி(50), ஜடேஜா(26) அவுட்டாகாமல் இருந்தனர்.

latest tamil news

ரகானே கலக்கல்

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு ரகானே அசத்தல் துவக்கம் தந்தார். சென்னையின் பந்துவீச்சும் எடுபடவில்லை. மில்னே பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரகானே. வெங்கடேஷ், 16 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ராணா(21) அதிவிரைவாக ரன் சேர்த்தார். சான்ட்னர் ‘சுழலில்’ ரகானே(44) சிக்கினார். சாம் பில்லிங்ஸ் 25 ரன் எடுத்தார். பொறுப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ்(20*) வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.