வங்கக் கடலோர நாடுகளின் பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் நாள் பங்கேற்க உள்ளார்.
வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பின் ஐந்தாவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது.
காணொலியில் நடைபெறும் இந்த மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அதற்கு உதவுவதற்கு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.